

லண்டன்,
இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்வி விசா பெற்று இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டு, பின்னர் அங்கேயே தஞ்சம் கோருபவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்து வதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். குறிப்பாக, ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங் கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட் டத்திருத்தம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.