நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம்

வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம்
Published on

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார்.

அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ந்தேதி கைது செய்யப்பட்டார். 20-ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் இருமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து மூன்றாவது முறையாக தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை 30-ம் தேதி நடக்கிறது. இதற்கிடையே அவரை நாடு கடத்துவது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இந்திய அதிகாரிகளிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com