சவுதிக்கு ஆதரவாக போர் விமானங்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு

கூடுதல் ஆதரவு அளிக்கும்படி சவுதி அரசு கேட்டு கொண்ட நிலையில், அதனை பரிசீலித்து வருகிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறினார்.
சவுதிக்கு ஆதரவாக போர் விமானங்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு
Published on: 

லண்டன்

சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக போர் விமானங்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சவுதி அரேபியா கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில், சவுதிக்கு ஆதரவாக போர் விமானங்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சவுதி மீது வான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம்

இதற்கேற்ப, ராயல் ஏர் போர்ஸ் போர் விமானங்களை அனுப்பி சவுதி நகரங்களை பாதுகாக்க உதவ உள்ளது. சவுதியின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை, ஹவுதி வான் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இது இருக்கும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஏமனின் உள்நாட்டு போரில் அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்.

ஹவுதிகள் தாக்குதல்

இதனால், ஏடன் நகரை தற்காலிக நகராக கொண்டு ஏமன் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த உள்நாட்டு போரில் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ளது. இதனையடுத்து ஹவுதி மற்றும் சவுதி அரேபியா இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஏமன் அரசு படைகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களையும் குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

போர் விமானங்கள்

இந்த தாக்குதலில் 73 வீரர்கள் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். ராணுவ பயிற்சி முகாமில் புதிய வீரர்கள் தேர்வுக்காக வந்திருந்த அவர்கள் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகி உள்ளனர்.

ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கொண்டு தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களால், சவுதி அரேபியா இதனை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில், இந்த முடிவை இங்கிலாந்து இன்று அறிவித்து உள்ளது.

இந்த போர் விமானங்கள் முற்றிலும் தற்காப்பு பணிகளுக்கு மட்டுமே இயக்கப்படும் என்றும் ஹவுதிக்கு எதிராக நேரடியாக எந்த தாக்குதலையும் நடத்தாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

கூடுதல் ஆதரவு

ஹவுதியின் தாக்குதல், மண்டல ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், எரிசக்தி வினியோகத்தில் இடையூறு மற்றும் வர்த்தக வழிகளில் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறினார்.

கூடுதல் ஆதரவு அளிக்கும்படி சவுதி அரசு கேட்டு கொண்ட நிலையில், அதனை பரிசீலித்து வருகிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com