ரஷிய அதிபர் புதின் மகள்களுக்கு எதிராக பொருளாதார தடை..!! - ஐரோப்பிய யூனியன் அதிரடி

ரஷிய அதிபர் புதின் மகள்களுக்கு எதிராக இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் போன்றவை பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பிரசல்ஸ்,

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இப்போது அதன் பார்வை புதினின் 2 வயதுக்கு வந்த மகள்கள் மீது திரும்பி உள்ளது. அந்த மகள்களுக்கும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள தனிநபர்கள் பட்டியலில் புதினின் மகள்கள் மரியா வொரொன்ட்சோவா மற்றும் கேடரினா டிகோனோவா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களது சொத்துகளை முடக்கி உள்ளதுடன், அவர்களுக்கு பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் புதின் மகள்கள் மீது இங்கிலாந்தும் பொருளாதார தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 1,200 தனி நபர்கள், நிறுவனங்கள் மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தம் 275 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.27.5 லட்சம் கோடி) ரஷிய சொத்துக்களை முடக்கி உள்ளன. இந்த தொகை ரஷியாவின் அன்னிய செலாவணி கையிருப்பின் 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com