கொரோனா பாதிப்புகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து

கொரோனா பாதித்த ஐரோப்பிய நாடுகளில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து
Published on

லண்டன்,

கொரோனா வைரஸ் உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்த ஆட்கொல்லிக்கு எதிராக தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டு பிடிக்கப்படாததால், கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதித்த ஐரோப்பிய நாடுகளில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியானதை தொடர்ந்து, ஐரோப்பா கண்டத்தில், கொரோனாவுக்கு அதிக மக்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த வைரசால் 2,50,000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com