இங்கிலாந்து நாடாளுமன்றம் முடக்கம்: பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் நீடிப்பது கேள்விக்குறி?

இங்கிலாந்து நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்நாட்டின் உச்சநீதி மன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்திருப்பதால், பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றம் முடக்கம்: பிரதமர் பதவியில் போரீஸ் ஜான்சன் நீடிப்பது கேள்விக்குறி?
Published on

லண்டன்

பிரெக்ஸிட் விவகாரத்தில் தெடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்ததால், நாடாளுமன்றத்தை பேரீஸ் ஜான்சன் முடக்கி வைத்தார். இதை எதிர்த்து தெடரப்பட்ட வழக்கில், இங்கிலாந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் இங்கிலாந்து நாடாளுமன்ற முடக்கத்தை சட்டவிரேதம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியில் பேரீஸ் ஜான்சன் நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

நாடாளுமன்ற முடக்கத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத்தை தவறாக வழிநடத்திய காரணத்துக்காக பிரதமர் பதவியிலிருந்து பேரீஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். எனினும், ஐ.நா. பெதுச்சபை கூட்டத்தில் கலந்து கெள்ள நியூயார்க் சென்றுள்ள பேரீஸ் ஜான்சன், எது நடந்தாலும் அக்டேபர் மாதம் 31ஆம் தேதிக்குள் ஐரேப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியே தீரும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, ராணி எலிசபெத்தை தெலைபேசியில் பேரீஸ் ஜான்சன் தெடர்பு கெண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதன் விவரம் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com