ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக அழைப்பு விடுப்போம்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

புதினின் போர் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி உயிர்களை அழித்துள்ளது என்று ரிஷி சுனக் கூறினார்.
ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக அழைப்பு விடுப்போம்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
Published on

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தோனேசியா சென்றுள்ளார்.இந்த நிலையில் ஜி-20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமரான பிறகு ரிஷி சுனக் மோடியை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

பாலிக்கு புறப்படுவதற்கு முன், ரிஷிசுனக் ஒரு அறிக்கையில் கூறியதாவது: "விளாடிமிர் புதினின் போர் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி உயிர்களை அழித்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் கொந்தளிப்பில் தள்ளப்பட்டுள்ளது.

இந்த ஜி20 உச்சி மாநாடு வழக்கம் போல் இருக்காது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மரியாதைக்காக புதினின் ஆட்சியை அகற்ற ஜி20 போன்ற இறையாண்மை மன்றங்களுக்கு அழைப்பு விடுப்போம். இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் உள்ள பொருளாதார சவால்களைத் தீர்க்கவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் செயல்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com