காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிப்பு

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிப்பு
Published on

லண்டன்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியே மூலம் பேசினார். அந்த வீடியோவில் ரிஷி சுனக், காரில் 'சீட் பெல்ட்' அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது வைரலாக பரவியதுடன், பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பும் கோரினார். இதனிடையே, சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com