இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்

இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் போரிஸ்ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முடிந்தவரை அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், ராஜ குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப செயல்பட விரும்பினேன். ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால், நான் அதில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com