இங்கிலாந்து மன்னர் பிலிப் ஆஸ்பத்திரியில் அனுமதி

இங்கிலாந்து மன்னர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து மன்னர் பிலிப் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், மன்னருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

99 வயதான பிலிப்புக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைநகர் லண்டனில் உள்ள கிங் எட்வர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலை தேறியுள்ளதாகவும், எனினும் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com