இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியது

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,625 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 46,51,988 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 008 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 06 ஆயிரத்து 482 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,17,498 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com