இங்கிலாந்தில் 90 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு...!

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,19,962 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35,152 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 73 லட்சத்து 25 ஆயிரத்து 785 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15,53,619 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com