இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
Published on

லண்டன்,

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில், இன்றைய பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும். இங்கிலாந்தில் 9,055- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 9 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com