இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி ஆன்லைனில் விற்பனை

இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி ஆன்லைனில் விற்பனை
Published on

லண்டன்,

விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 20 கிராம் உள்ளது. விலை 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க கட்டி, ராயல் தங்க சாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, லட்சுமி உருவம் பொறித்த தங்கக்கட்டியை ராயல் தங்கசாலை வெளியிட்டு இருந்தது.

மேற்கண்ட 2 கடவுள்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிவிலை சேர்ந்த நிலேஷ் கபாரியா ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com