உக்ரைன்-ரஷியா போருக்கு மத்தியில் கமலா ஹாரிஸ் போலந்து, ருமேனியா பயணம்

உக்ரைன்-ரஷியா இடையிலான போருக்கு மத்தியில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் போலந்து, ருமேனியா ஆகிய 2 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
உக்ரைன்-ரஷியா போருக்கு மத்தியில் கமலா ஹாரிஸ் போலந்து, ருமேனியா பயணம்
Published on

வாஷிங்டன்,

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 24-ந்தேதி அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் உக்கிரமான போர் நேற்று 10-வது நாளை எட்டியது. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ரஷியாவை கடுமையாக எதிர்த்து வரும் அமெரிக்கா, ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகளை அணி திரட்டி வருகிறது. குறிப்பாக ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைக்க அமெரிக்கா முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன்-ரஷியா இடையிலான போருக்கு மத்தியில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் போலந்து, ருமேனியா ஆகிய 2 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அவர் இரு நாடுகளிலும் பயணம் மேற்கொள்வார் எனவும், போலந்து மற்றும் ருமேனியா நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது ரஷியாவின் நியாயமற்ற உக்ரைன் படையெடுப்புக்கு பதிலளிக்க நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர் முன்னெடுப்பார் எனவும் அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கமலா ஹாரிசின் சந்திப்புகள் உக்ரைனின் அண்டை நாடுகள், ரஷிய வன்முறையால் அடைக்கலம் புகும் உக்ரைன் அகதிகளை வரவேற்று அவர்களைக் கவனித்துக் கொள்ளும் போது, அமெரிக்கா அவர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்தும் கவனம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com