ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் உரை!

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார்.
ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் உரை!
Published on

நியூயார்க்,

ஐ.நா.பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் 21ம் தேதி (நேற்று) நடைபெற்றது. இந்த உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார்.

முன்னதாக, ஐ.நா.பொதுச் சபையில் 2 ஆண்டுகளுக்கு பின் உலகத் தலைவர்கள் நேரடியாக கலந்துகொண்டனர். ரஷியாவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் தோன்றியதும், அவர் சபையில் இருந்தவர்களின் கைத்தட்டலைப் பெற்றார்.

இந்த கூட்டத்தில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேசி, பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பானது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-

உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்த குற்றங்கள், பெண்கள் மற்றும் ஆண்களை சித்திரவதை மற்றும் அவமானப்படுத்திய குற்றங்கள் ஆகியவற்றுக்கான தண்டனை ரஷியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட வேண்டும்.

ரஷியாவிற்கு எதிராக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒரு சமிக்ஞையாக இருக்கும்.

ரஷியா இந்த போருக்கு அதன் சொந்த சொத்துக்களைக் கொண்டு இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டும். போர் நிறுத்தம் தொடர்பான உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷியா பயப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பொய் சொல்வது பொதுவானது, அதை போல ரஷியா அனைவரிடமும் பொய் சொல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com