உக்ரைன் அணையின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

கெர்சன் அருகே பெரிய அணையை ரஷியா அழித்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியது, பரவலான வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
cnn.com/Maxar Technologies/Reuters
cnn.com/Maxar Technologies/Reuters
Published on

உக்ரைன்

ரஷியா - உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்கு புதிதாக 2.5 பில்லியன் டாலர் நிதியுதவி அமெரிக்கா வழங்கியது. ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.இந்த போர் முடிவுக்கு வராமல் தொடர்வது இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று கெர்சன் நகருக்கு அருகே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.மேலும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.

அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் 18 மில்லியன் கன மீட்டர் நீர் வெளியேறிவருகிறது எனவும் ,இதனால் கரையோரம் உள்ள ஆயிரகணக்கான  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம்,ஆற்றின் வலது கரையில் உள்ள 10 கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான ஜபோரில்லால்யா பகுதியில் அணுமின் நிலையம் உள்ளது.இதற்கு காக்கோவ்க நீர்தேக்கதிலிருந்துதான் குளிரூட்டுவதற்கு தேவையான நீர் வழங்கப்படுகிறது.நீர் வழங்கப்படாவிட்டால் அணுமின் நிலையம் பாதிக்கபடும் எனக் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ,சர்வதேச அணு சக்தி கூட்டமைப்பு  தனது டுவிட்டரில், உடனடியாக அணுமின் நிலையத்திற்கு ஆபத்து இல்லை, என பதிவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டின்  பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் கெர்சன் பகுதி ராணுவத் தலைவர் காலை 7 மணிக்கு வெளியிட்ட காணொளியில் ,ரஷிய ராணுவம் மேலும் ஒரு பயங்கரவாத செயலை செய்துள்ளது.மேலும் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் அளவு 5 மணி நேரத்தில் முக்கிய கட்டத்தை எட்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com