

லீவ்,
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.
இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது.
உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இருநாட்டு ராணுவ தரப்பிலும் வீரர்கள் பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் உக்ரைன் தரப்பில் எத்தனை வீரர்கள் கொல்ல்லப்பட்டனர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.