சுமி பகுதியில் இருந்து முழுவதுமாக வெளியேறிய ரஷியப் படைகள்..!

உக்ரைனின் சுமி பகுதியில் இருந்து ரஷியப் படைகள் முழுவதுமாக வெளியேறியது.
கோப்புப் படம் AFP
கோப்புப் படம் AFP
Published on

சுமி,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷியாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போனது.

இந்த நிலையில் உக்ரைனின் சுமி பிராந்தியத்திலிருந்து ரஷியப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிட்டதாக சுமி கவர்னர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷிய இராணுவம் விட்டுச் சென்ற வெடிபொருட்களை அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புக்குழு வெடிபொருட்களை அகற்றும் போது அதனால் அங்கு வெடிப்பு ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுமி பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், இன்னும் பல சுரங்கங்கள் மற்றும் ஆராயப்படாத பகுதிகள் இருப்பதால், பாதுகாப்பானது அல்ல என்று கூறியுள்ளார்.

வாகனங்களை சாலையின் ஓரத்தில் ஓட்ட வேண்டாம் என்றும் வனச் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அழிக்கப்பட்ட வாகனங்கள் அல்லது முன்னாள் ரஷிய பகுதிகளை அணுக வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com