ரஷியா ஒரு போலியான மனிதாபிமான வரைவு தீர்மானத்துக்கு ஆதரவு கோருகிறது! - உக்ரைன் பிரதிநிதி

ரஷியா கொண்டுவந்துள்ள மோசமான பாசாங்குத்தனத்தை ஆதரிக்குமாறு ஐ.நா உறுப்பினர்களுக்கு ரஷியா வேண்டுகோள் விடுத்துள்ளது என்று உக்ரைன் பிரதிநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷியா ஒரு போலியான மனிதாபிமான வரைவு தீர்மானத்துக்கு ஆதரவு கோருகிறது! - உக்ரைன் பிரதிநிதி
Published on

நியூயார்க்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைன் சார்பில் ஐ.நா.வுக்கான உக்ரைனின் நிரந்தர பிரதிநிதி செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷியாவின் தாக்குதலை கண்டித்து பேசினார்.

இதற்கிடையே அவர் ஐ.நா சபைக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ரஷியாவின் மோசமான பாசாங்குத்தனத்தை ஆதரிக்குமாறு ஐ.நா உறுப்பினர்களுக்கு ரஷியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, ஒரு மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ரஷியா கொண்டுவந்துள்ளது. ரஷியாவின் இந்த மனிதாபிமான வரைவு தீர்மானம் மூர்க்கத்தனமான ஒன்றாகும்.

இது குறித்து, ஐ.நா உறுப்பினர்கள் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்ய வேண்டும்.

உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் தொடுக்கப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலால் வெளிப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இரத்தத்தில் ஐ.நா குதிக்கும் முன்னர், ஐ.நா உறுப்பினர்கள் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com