ஈரானில் 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது

ஈரானில் இருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது.
ஈரானில் 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது
Published on

தெஹ்ரான்,

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியது.

ஈரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், போயிங் 737 ரகத்தை சேர்ந்தது. தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com