உக்ரைனில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
Published on

கீவ்,

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரின் ஹொலொசிவஸ்கி பகுதியில் உள்ள சாலையில் சென்றவர்களை குறிவைத்து மர்மநபர் இன்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், பிணை கைதிகளை பிடித்து வைத்திருந்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக்கொன்று பிணை கைதிகளை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com