அமெரிக்காவில் உக்ரைனியர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு; 18 மாதங்கள் தங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பு

அமெரிக்காவில் உக்ரைன் மக்கள் 18 மாதங்கள் தங்கி இருக்க அனுமதி வழங்கப்படுவதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உக்ரைனியர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு; 18 மாதங்கள் தங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு படையெடுத்துள்ளார்கள். இந்த நெருக்கடியான தருணத்தில் அமெரிக்காவில் உள்ள உக்ரைன் மக்களுக்கு ஜோ பைடன் நிர்வாகம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி அலெஜாண்ட்ரோ என்.மயோர்காஸ் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவில் உக்ரைனியர்கள் தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை எனப்படும் மத்திய திட்டத்தின்கீழ் 18 மாதங்கள் தங்கிக்கொள்ளலாம் என்றும் இந்த பாதுகாப்பு தகுதி பெறுவதற்கு தனிநபர்கள் குறைந்தபட்சம் கடந்த 1-ந் தேதி முதல் அங்கு இருந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த திட்டத்தினால் 30 ஆயிரம் உக்ரைனியர்கள் பலன் அடைவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com