இங்கிலாந்தின் புதிய நிதி மந்திரி, சுகாதார மந்திரி நியமனம் - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தின் புதிய நிதி மந்திரி மற்றும் சுகாதார மந்திரியை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.

கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக், சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்தநிலையில், இங்கிலாந்தின் நதீம் சஹாவி நிதி மந்திரியாகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார மந்திரியாகவும் செயல்படுவார் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com