ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு: ஐநா கவலை

ஆப்கானில் தாலீபான் அரசு ஆட்சியை பிடித்த பிறகு, பெண்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு: ஐநா கவலை
Published on

ஜெனீவா,

ஆப்கானில் தாலீபான் அரசு ஆட்சியை பிடித்த பிறகு, பெண்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உலக நாடுகள் பலவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இவற்றிற்கு செவி சாய்க்காத தலீபான் அரசு, தற்போது இஸ்லாம் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என குறிப்பிட்டு, புதிய உத்தரவை அறிவித்துள்ளது. உச்சி முதல் பாதம் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

தலீபான்களின் இந்த உத்தரவுக்கு ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. ஐநா சபையின் பொதுச்செயலாளர் இது தொடர்பாக கூறுகையில், அவசியப்பட்டால் மட்டுமே பெண்கள் பொது இடங்களுக்கு வர வேண்டும். அப்படி வரும் போது தலை முதல் கால் வரை முழுமையாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்ற தலீபான்களின் உத்தரவு கவலை அளிக்கிறது. தலீபான்கள் தங்கள் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com