ஐ.நா. பொது சபை கூட்டம்; பிரதமர் மோடி அமெரிக்க பயணம் ரத்தாகிறது?


ஐ.நா. பொது சபை கூட்டம்; பிரதமர் மோடி அமெரிக்க பயணம் ரத்தாகிறது?
x

அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல மாட்டார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் இம்மாத இறுதியில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடை பெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரி விதிப்பினால் அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல மாட்டார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடிக்கு பதில் இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story