

ஜெனிவா,
மியான்மர் நாட்டில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு அசாமில் சட்ட விரோதமாக குடியேறிய 7 ரோஹிங்யாக்கள் கோர்ட்டு உத்தரவுப்படி சமீபத்தில் நாடு கடத்தப்பட்டனர்.
இந்த நிலையில் ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தற்போது 18 ஆயிரம் ரோஹிங்யாக்கள் வசித்து வருவதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரெஜ் மகசிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 7 பேரை நாடு கடத்தியது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம், எந்த சூழ்நிலையில் அந்த 7 பேரும் நாடு கடத்தப்பட்டனர் என்று விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.