காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி


காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி
x
தினத்தந்தி 19 Sept 2025 9:48 AM IST (Updated: 19 Sept 2025 11:25 AM IST)
t-max-icont-min-icon

பதற்றம் அதிகரித்து உள்ளதால் பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு காலி செய்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்

நியூயார்க்,

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது.

இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 80 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகருக்குள் தரை வழியாக ஊடுருவி முன்னேறி வருகிறது. இதையடுத்து அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளதால் பாலஸ்தீனியர்கள் காசா நகரை காலி செய்து கால்நடையாகவும், வாகனங்கள் மூலமாகவும் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.

இந்தநிலையில், காசாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தது.

1 More update

Next Story