

கொழும்பு
இலங்கையில் கடந்த ஓராண்டாக புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு, புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ம்தேதி கட்டாய மதமாற்றம் செய்வதாக இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கெடுக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தினரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மேதல் நிலவியது. இதில் சிங்களர் ஒருவர் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர், இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டனர்.
இக்கலவரம் உச்சகட்டத்தை தொட்டதால் கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கண்டு கனடா வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இலங்கையில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் வருத்ததை அளிப்பதாகவும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் மத்திய கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை இனத்தவராக உள்ள இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 பேர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.
இதன்காரணமாக தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து நெருக்கடி நிலை அங்கு நீடிக்கிறது. தொடர்ந்து கண்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. மொபைல் இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இப்படி நெருக்கடி நிலையைக் கண்டு கனடா வெளிவிவகார அமைச்சர் பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இலங்கையில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் வருத்ததை அளிப்பதாகவும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.