நெல்சன் மண்டேலாவை எங்கள் சொந்தமாக கருதுகிறோம் அவர் பாரத் ரத்னா என்றழைக்கப்படும் பெருமைக்குரியவர்-சுஷ்மா சுவராஜ்

நெல்சன் மண்டேலாவை எங்கள் சொந்தமாக கருதுகிறோம் அவர் பாரத் ரத்னா என்றழைக்கப்படும் பெருமைக்குரியவர் என சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார். #BharatRatna #SushmaSwaraj #NelsonMadibaMandela
நெல்சன் மண்டேலாவை எங்கள் சொந்தமாக கருதுகிறோம் அவர் பாரத் ரத்னா என்றழைக்கப்படும் பெருமைக்குரியவர்-சுஷ்மா சுவராஜ்
Published on

வாஷிங்டன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.

இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். அங்கு நெல்சன் மண்டேலாவை பற்றி அமைதி உச்சிமாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நெருங்கிய தெடர்பு உள்ளதாக கூறினார். இந்திய அரசாங்கம் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கெளரவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் காந்தியடிகளும், மண்டேலாவும் அமைதி வழியில் பெதுமக்கள் விடுதலைக்காக பேராடியதாகவும் அவர் குறிப்பிட்டார். நெல்சன் 'மடிபா' மண்டேலாவை எங்கள் சொந்தமாக கருதுகிறோம் அவர் பாரத் ரத்னா 'என்றழைக்கப்படும் பெருமைக்குரியவர்.

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை உத்வேகம் நிறைந்தது . பாகுபாடு மற்றும் துன்பம் ஆகியவற்றில் அவர் பயமின்மையையும் தைரியத்தையும் காட்டினார். அவரால் மதிப்பிடப்பட்ட மதிப்புகள் - மன்னிப்பு, இரக்கம் மற்றும் சமுதாயத்தில் உள்ளுணர்வு ஆகியவை இப்போது இந்த கொந்தளிப்பான காலங்களில் இன்றும் அதிகமாக தேவைப்படுகின்றன.

பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்த அமைச்சர் சுஷ்மா, எந்த வகையிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராக சர்வதேச தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, நமது சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com