அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 2 பேர் பலியாயினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
Published on

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோ நகரில் உள்ள இரவு விடுதியில் இசை நிகழ்ச்சியின்போது, வாய்த்தகராறு ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

* கடும் பனிப்பொழிவு காரணமாக நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் மீட்புக்குழுவினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

* சிரியாவில் உள்ள ரஷிய விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் 3 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

* உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் நல்ல உறவுடனேயே செயல்பட விரும்புகிறோம் என்றும், ஆனால் அவர்கள் உள்நாட்டு அரசியலுக்கு எங்கள் நாட்டையோ, நாட்டு மக்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.

* பராகுவே நாட்டில் உள்ள சிறையில் இருந்து 80 கைதிகள் தப்பியோடி விட்டனர். சிறையின் உள்ளே சுரங்கப்பாதை தோண்டி அவர்கள் தப்பியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com