

காபூல்,
அமெரிக்க அரசு மற்றும் தலீபான்கள் பிரதிநிதிகள் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையின் பலனாக ஆப்கானிஸ்தானில் தற்காலிக சண்டை நிறுத்தம் கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.
இந்த சண்டை நிறுத்தம் 7 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் அமைதி நிலவுகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் சமான்கன் மாகாணத்தில் உள்ள டரா இ சுப் பாலா மாவட்டத்தின் கவர்னரை ஆயுதம் ஏந்திய கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது.
எனினும் இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.