

வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 30,65,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,22,862 பேர் குணமடைந்த நிலையில் 2,11,631 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56,649 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 70 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த நாடு பல மக்களை இழந்திருக்கிறது. 22 லட்சம் பேர் கொரோனாவால் இறக்கலாம் என்று அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது 60 முதல் 70 ஆயிரத்துக்குள் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். எனினும் நாம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதில் முக்கியமானது எல்லைகளை அடைத்தது. சீனாவிலிருந்து வந்தவர்களுக்குத் தடை விதித்தது என்று தெரிவித்தார்.