இந்திய வம்சாவளி வீரரை நெற்றியில் திலகம் அணிய அனுமதித்த அமெரிக்க விமானப்படை..!!

பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது.
Image Courtesy : Twitter
Image Courtesy : Twitter
Published on

வாஷிங்டன்,,

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றி வருபவர் தர்ஷன் ஷா. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் வாரன் விமானப்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரை முதல் முறையாக நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து தர்ஷன் ஷா கூறுகையில், " நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய அடையாளங்களில் ஒன்றான சீருடையுடன் திலகத்தையும் அணிகிறேன். இதை அணிவதை சிறப்பாக உணர்கின்றேன். வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்ல இது எனக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.

சீருடையில் இருக்கும் போதும் மத சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ள நாட்டில் நான் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன் " என தெரிவித்தார்.

அமெரிக்க விமானப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மத சுதந்திரத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com