சிரிய ராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பெண்டகன் தகவல்

சிரிய ராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்காவி ராணுவ தலமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
சிரிய ராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பெண்டகன் தகவல்
Published on

டமாஸ்கஸ்,

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் ஆதரவு படைகளும் களம் இறங்கியுள்ளன.மேலும் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ரக்கா உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அதிபர் பஷல் அல் -ஆசாத் ஆதரவு ராணுவ போர் விமானங்கள் ரக்கா மீது குண்டு வீசி தாக்கின. அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் படைகள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அமெரிக்க ராணுவம் சிரிய அரசு ஆதரவு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

இதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. ஆனால் தங்களை காப்பாற்றி கொள்ளவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் சிரியாவின் ஆளில்லாத விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. தற்போது முதன் முறையாக சிரியா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. சிரிய ஆதரவு படையை இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com