சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து வைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்

சிரியாவில் அமெரிக்க ராணுவதளம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு வான்வழி தாக்குதல் மூலம் அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து வைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்
Published on

டமாஸ்கஸ்,

சிரியாவில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.

அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளம் மீது நேற்று முன்தினம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே ராணுவ தளம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து அமெரிக்கா ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com