ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகசக்தி வாய்ந்த குண்டு ஒன்றையும் ஈரான் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா திட்டம்
Published on: 

வாஷிங்டன்,

ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக குற்றஞ்சாட்டி அதன் மீது பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவும், மேலை நாடுகளும் பொருளாதாரத் தடைகள் விதித்தன.இந்த நிலையில் காசா போர் காரணமாக வளைகுடாவில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இப்படிப் பட்டநிலையில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து மிகப் பெரிய தாக்குதலை நடத்தின.

ஈரான் அணு குண்டுதயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலின் போது ஈரானிய உச்சதலைவர் அயோத்துல்லா அலி கமேனி உள் பட பல தலைவர்களும், அதிகாரிகளும் கொல்லப் பட்டனர்.

நீண்ட நாள் தாக்குதல் நடந்தது. அமெரிக்காவுக்கு உதவும் பிற வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.இதனால் கச்சா எண்ணெய் சப்ளை தடை பட்டது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது.

இதையடுத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. அதன்பிறகு இஸ்ரேல் விலகிக்கொண்டது.

அமெரிக்கா மட்டுமே ஈரானுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டது. அதுவும் தோல்வியடைந்தது. அதனால் வளைகுடாவில் நேரடிப்போர் இல்லாவிட்டாலும் இன்னும் முழு அமைதி திரும்பவில்லை.

அவ்வப்போது ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது போன்ற சூழ்நிலையில் அரபிக்கடலில் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு

கேபிள்களை தகர்க்க ஈரான் திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியானது.

மேலும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகசக்தி வாய்ந்த குண்டு ஒன்றையும் ஈரான் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஈரானின் திட்டத்தை முன்கூட்டியே முறியடிக்கும் வகையில் அந்த நாட்டின் மீது இன்னொரு மிகப்பெரிய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபடி டிரம்ப் தயாராகி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் விரைவில் பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் தனது செல் வாக்கை நிலைநாட்ட டிரம்ப் விரும்புகிறார். ஆகவே ஈரான் மீது மிக பெரிய தாக்குதலுக்கு அவர் திட்டமிட்டுள்ளார்.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று ஒரு பீப்பாய் விலை 116.72 டாலர் என்ற அளவில் உள்ளது. போர் நடந்த சமயத்தில் மார்ச் மாதத்தில் ஒரு பீப்பாய் விலை 125 டாலரை கடந்தது. பின்னர் சுமார் 60 டாலர் என்ற அளவுக்கு வந்தது. கடந்த 6 மாதமாக மீண்டும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com