ஈரான் ஏவுகணை தளம் மீது பங்கர் - பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்

AI Image
AI Image
Published on

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஈரான், அமெரிக்காவை பழி தீர்க்காமல் விடமாட்டோம் என்று எச்சரித்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. அதேபோல், இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.இந்த நிலையில், அமெரிக்கா முதல் முறையாக சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை பயன்படுத்தியுள்ளது.

. ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் ஏவுகணை தளங்களை குறிவைத்து 5,000 பவுண்ட் (சுமார் 2,267 கிலோ) எடையுடைய பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பங்கர் பஸ்டர் குண்டுகள் என்பது நிலத்தடியில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டவை. ‘பதுங்குக் குழி ஆயுதம்’ என்றும் அழைக்கப்படும் இக்குண்டுகள், நிலத்தடியில் உள்ள கான்கிரீட் கட்டமைப்புகளையும் ஊடுருவி சென்று பின்னர் வெடிக்கும் திறன் கொண்டவை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com