அமெரிக்க வங்கிகளில் சேவை பாதிப்பு - வாடிக்கையாளர்கள் அவதி

சைபர் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வங்கிகளில் சேவை பாதிப்பு - வாடிக்கையாளர்கள் அவதி
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்க வங்கிகளில் திடீரென சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஜேபி மோர்கன், பேங்க் ஆப் அமெரிக்கா, சேஸ், வால்ஸ் பார்கோ, யூஎஸ் பேங்க் அண்ட் டிரஸ்ட் உள்பட பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் தினமும் கோடிக்கணக்கான பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

வங்கிகள் சேவை பாதிப்பு

இந்நிலையில், அமெரிக்காவில் இன்று திடீரென வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜேபி மோர்கன், பேங்க் ஆப் அமெரிக்கா, சேஸ், வால்ஸ் பார்கோ, யூஎஸ் பேங்க் அண்ட் டிரஸ்ட் உள்பட பல்வேறு வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளை பார்வையிடுவதும், பணப்பரிவர்த்தனை செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

வங்கிகள் சேவைகள் பாதிப்பு தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டது என்றும் சைபர் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த சில நாட்களுக்குமுன் உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட் லுக், டீம்ஸ், கோ பைலட் தளங்களின் சேவைகள் முடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

X