ஜமால் கசோக்கி கொலை: சவுதியை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்கா தடை

பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் எனக்கூறி சவுதியை சேர்ந்த 16 பேர், நாட்டுக்குள் வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஜமால் கசோக்கி கொலை: சவுதியை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்கா தடை
Published on

வாஷிங்டன்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை விமர்சித்து எழுதி வந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி, கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்தான்புல்லில் வைத்து கொல்லப்பட்டார்.

இதில் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக புகார் உள்ளது. இந்த சூழலில், பத்திரிக்கையாளர் கொலையில் தொடர்புடையவர்கள் என 16 பேர் அடங்கிய பட்டியலை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டது.

அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த தடை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com