டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு: அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி

மேல் முறையீட்டு மனுவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து இருப்பதால் டிக் டாக் செயலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு: அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி
Published on

வாஷிங்டன்,

'டிக் டாக்' எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலா. வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது.

இதை எதிர்த்து, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com