டிரம்பின் விசா கட்டுப்பாட்டுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடி தடை

புதிய விசா கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வரவிருந்தது. இதனை எதிர்த்துப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த மாசசூசெட்ஸ் பெடரல் கோர்ட்டு இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
டிரம்ப்
Published on

அமெரிக்காவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும், அங்குள்ள முன்னணி ஊடகங்களில் பணியாற்ற வும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக் கானோர் அந்நாட்டுக்கு செல்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் விசா பெற்று அமெரிக்காவில் தங்கிப் படித்து வருகின்றனர்.மாணவர்கள் தங்களின் படிப்பை முடிக்கும் வரை அங்கு தங்கியிருக்க அனுமதிக்கும் விசா நடைமுறை பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசு, வெளி நாட்டினர் தங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசா விதிகளில் பல மாற்றங்களைப் புகுத்தி வருகிறது.

அதிகபட்சமாக 4 ஆண்டுகள்

அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையா ளர்களின் அமெரிக்க விசா காலத்துக்கு கடுமையான உச்சவரம்பை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த புதிய விதியின்படி, வெளிநாட்டு மாணவர்களின் விசா காலத்தை அதிகபட்சமாக 4 ஆண்டுகளாகவும், பத்திரிகையாளர்களின் விசா காலத்தை வெறும் 240 நாட்களாகவும் குறைக்கத் திட்டமிடப்பட்டது.இந்த விதிகள் அமலுக்கு வந்தால், 6 ஆண்டுகள் வரை நீடிக்கும் பி.எச்.டி போன்ற உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் பாதியிலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழல் உருவானது. இதனால், அங்கு படித்து வரும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.

இடைக்காலத் தடை உத்தரவு

இந்த புதிய விசா கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வரவிருந்தது. இதனை எதிர்த்துப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த மாசசூசெட்ஸ் பெடரல் கோர்ட்டு இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த விசா கட்டுப்பாடு அமலுக்கு வந்தால், அமெரிக்காவின் உயர்கல்வித் துறைக்கும், பொருளாதாரத்துக்கும் பேரழிவு ஏற்படும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.அரசை விமர்சிக்கும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் விசாக்கள் இதன் மூலம் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி கவலை தெரிவித் துள்ளார். கோர்ட்டின் இந்த அதிரடி தடையுத்தரவு, விசா முடக்க பயத்தில் இருந்த இந்திய மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மிகப்பெ ரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com