சீனாவுக்கு சவால்: தென் சீன கடற்பகுதியில் பயணித்த அமெரிக்க போர் கப்பல்

தென் சீன கடற்பகுதியில் சீனாவால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுக்கு சற்று தொலைவில் அமெரிக்க போர் கப்பல் ஒன்று இன்று பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுக்கு சவால்: தென் சீன கடற்பகுதியில் பயணித்த அமெரிக்க போர் கப்பல்
Published on

தென் சீன கடற்பகுதியை சீனா, தைவான், வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன. இயற்கை வளம் நிறைந்த இப்பகுதியில் உள்ள தீவு கூட்டங்களில் ஒன்றான ஸ்பிராட்லி தீவில் சீனா செயற்கையாக தீவு ஒன்றை அமைத்துள்ளது.

சீனா இந்த பகுதியை ஆக்கிரமித்து உள்ளதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் செயற்கை தீவுக்கு 12 நாட்டிகல் மைல்கள் தொலைவில் அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்று கடந்து சென்றது.

இப்பகுதியில் சுதந்திரமாக அனைத்து கப்பல்களும் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா முனைப்புடன் உள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு சவால் விடும் வகையில் அமெரிக்காவின் ஜான் எஸ். மெக்கெய்ன் என்ற போர் கப்பல் தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள சீனாவின் செயற்கை தீவுக்கு அருகே நெருங்கி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com