ஈரானில் பள்ளி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை: டிரம்ப்

ஈரானில் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 165 சிறுமிகள் பலியாகினர். இதற்கு அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியது.
ஈரானில் பள்ளி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை:  டிரம்ப்
Published on

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சரண் அடையுமாறு ஈரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். ஆனால் சரண் அடையும் பேச்சுக்கே இடமில்லை. சரண் அடைய மாட்டோம் என்று ஈரான் அதிபர் மசூத் பதிலடி கொடுத்து இருந்தார். அதோடு தாக்குதலுக்காக அவர் வளைகுடா நாடுகளிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.இந்த நிலையில் ஈரானுக்கு டிரம்ப் புதிய எச்சரிக்கை விடுத்தார். மிகவும் கடுமையாக தாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களால் ஈரான் சிதைந்துள்ளது.ஈரான் தனது அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இனி அண்டை நாடுகளை தாக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் இந்த உறுதி அளிக்கப்பட்டது. ஈரான் முன்பு மத்திய கிழக்கை ஆள விரும்பியது, ஆனால் இப்போது தோல்வியடைந்துள்ளது. ஈரான் நாட்டின் அண்டை நாடுகள் “நன்றி அதிபர் டிரம்ப்” என்று கூறி வருகின்றனர். அதற்கு நான் வரவேற்கிறேன் என்று பதில் அளித்துள்ளேன்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும். ராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்த தலைமையும் இல்லாதபோதுதான் போர் முடிவடையும். அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதில் நான் ஈடுபட விரும்புகிறேன். அமெரிக்காவை போருக்கு கொண்டு செல்லாத ஒரு அதிபரை தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று வருகிறோம். அவர்களின் கடற்படை, விமானப்படையை அழித்து விட்டோம். சிறிது காலம் போர் தொடரும். அவர்களின் பெரும்பாலான ஏவுகணைகளை நாங்கள் அழித்துவிட்டோம்.ஈரானின் பெண்கள் பள்ளியின் மீதான தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை. அந்த தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது. ஏனென்றால் அவர்கள் துல்லியமாக இலக்குகளை குறிவைத்து தாக்குபவர்கள் அல்ல. ஆகவே, ஈரானே அந்த தாக்குதலை நடத்தியது. இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com