

வாஷிங்டன்
இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாகவே நடைபெறுவதாகவும் அமெரிக்க வெளியுறவு வட்டாரங்களை சுட்டிக்காட்டி சில மூத்த அதிகாரிகள் செய்தியை கசிய விட்டுள்ளனர்.
அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அப்பிரதேசத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரகசிய பேச்சுக்கள் பல மாதங்களாகவே நீடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
இப்பேச்சுவார்த்தைகள் ஜோசஃப் யுன் எனும் வடகொரிய கொள்கை வகுப்பாளருக்கும், ஐநா அவையில் இடம் பெற்றுள்ள மூத்த தூதர் பாக் சோங் இல் என்பவருக்கும் இடையில் நடைபெறுவதாகவும் பெயர் சொல்ல விரும்பாத அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.