ஏமனில் அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஏமனில் அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஏமனில் அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
Published on

ஏடன்,

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சவுதி அரேபியா தலைமையிலான இந்த கூட்டுப்படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான பன்முக பயன்பாடு கொண்ட எம்.கியூ.9 ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனின் மத்திய பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள தமர் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் நுழைந்தபோது, ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சவுதி கூட்டுப்படைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏமனின் வான்வெளியில் படையெடுப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும், ஏனெனில் ஏமன் வானத்தில் அன்னிய விமானங்கள் தோன்றுவதை தடுக்க கிளர்ச்சியாளர்களுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com