அமெரிக்க தேர்தல்: குடியரசு கட்சி அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப்

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்க தேர்தல்: குடியரசு கட்சி அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 9-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் அனைத்து மாகாணங்களில் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியினரிடையே டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்தது. எனவே இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் போட்டியில் இருந்து விலகினர்.

இந்தநிலையில் தற்போது நிக்கி ஹாலேவும் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியதால் அந்த கட்சியின் வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

எனவே அவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிப்பதற்கான குடியரசு கட்சியின் மாநாடு விஸ்கான்சின் மாகாணம் மில்வாகீ நகரில் நடைபெற்றது. அப்போது அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 14-ம் தேதி பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது வலது காதில் தோட்டா உரசிச்சென்றதால் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்தநிலையில் காதில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு போட்டுக்கொண்டு டிரம்ப் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்த கட்சியினருக்கு நன்றி தெரிவித்து அவர் உரையாற்றினார்.

மேலும் குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓகியோவைச் சேர்ந்த எம் பி ஜேம்ஸ் டேவிட் வென்சி பெயரையும் அவர் அறிவித்தார். முந்தைய ஆட்சியின்போது டிரம்பை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவரை துணை ஜனாதிபதியாக டிரம்ப் அறிவித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் டேவிட் இந்திய வம்சாவளியான உஷா சிலுக்குரி என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த உஷா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com