துப்பாக்கி சூட்டிற்கு 11 பேர் பலி; கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டிற்கு 11 பேர் பலியான நிலையில் அந்நாட்டில் கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டிற்கு 11 பேர் பலி; கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் ராபர்ட் பவர்ஸ் என்ற நபர் யூத மக்களின் வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் முதலில் 4 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

இந்நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என அமெரிக்க நீதி துறை தெரிவித்துள்ளது.

நமது சமூகத்தில் மத அடிப்படையிலான வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எந்த இடமும் இல்லை என அரசு வழக்கறிஞர் ஜெப் கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் 31ந்தேதி வரை வெள்ளை மாளிகை, ராணுவ நிலைகள், கப்பற்படை தளங்கள் மற்றும் கப்பல்களில் உள்ள அனைத்து கொடிகளும் அரை கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com