மோசூல் மசூதி இடிப்பிற்கு அமெரிக்க தளபதி கண்டனம்

அமெரிக்க ராணுவ தளபதி ஐஎஸ் இயக்கம் மசூதியை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோசூல் மசூதி இடிப்பிற்கு அமெரிக்க தளபதி கண்டனம்
Published on

வாஷிங்டன்

ஈராக்கின் மோசூல் நகரில் இருக்கும் பிரபல அல் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தரைமட்டமாகியதாக கூறப்படுகிறது. மசூதியையும் அதன் கோபுரங்களையும் இடித்திருப்பது மோசூல் நகருக்கும், ஈராக்கிற்கும் எதிரான குற்றமாகும். இதற்கான பொறுப்பை ஐஎஸ் இயக்கமே முழுமையாக ஏற்க வேண்டும் என்று கூறினார் ஜோசஃப் மார்ட்டின் எனும் ராணுவ தளபதி.

இந்த மசூதியிலிருந்துதான் 2014 ஆம் ஆண்டில் ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் பக்தாதி காலிஃபா அமைக்கப்பட்டதாக அறிவித்தார். மோசூல் நகரை முழுமையாக கைப்பற்றிய ஈராக் படைகள் மசூதியை நெருங்கிய சமயத்தில் பெரிய வெடிப்பில் மசூதி இடிந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் ஐ எஸ் இயக்கமோ அமெரிக்க விமான தாக்குதலிலேயே மசூதி தகர்ந்ததாக கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com