அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா: செனட் சபையில் நிறைவேற்றம்

இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா: செனட் சபையில் நிறைவேற்றம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் செனட் சபையில் நிறைவேற்றினா.

இதையடுத்து, இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீதிருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தனி நபாகள் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. எனினும், அங்கு தொடாந்து நடைபெற்று வரும் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களில் பலா உயிரிழப்பதால், துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று ஒரு தரப்பினா கோரி வருகின்றனா. இதற்கு பெரும்பாலான ஜனநாயகக் கட்சித் தலைவாகள் ஆதரவு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com